இட்லீ & தோசை சாம்பார் /ITLY & DOSAI SAMBAR

இட்லீ & தோசை சாம்பார் /ITLY & DOSAI SAMBAR

தேவையான பொருட்கள்:-

வெங்காயம் – 6 nos (நறுக்கியது)

தக்காளி – 2 nos (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 5 nos

கேரட்,கத்திரிக்காய்,உருளைக்கிழங்கு – 1 கப் (நறுக்கியது)

குழம்பு மிளகாய் பொடி – 1 tbsp

பெருங்காயப்பொடி – 1 pinch

மஞ்சள் பொடி – 1/4 tbsp

சமையல் எண்ணெய் – 1 tbsp

கொத்தமல்லி தழை – சிறிது

உப்பு – தேவைக்கு ஏற்ப

தாளிக்க:-

சமையல் எண்ணெய் – 2 tbsp

வெங்காயம் – 1 no(நறுக்கியது)

காய்ந்த மிளகாய் – 2 nos

கடுகு -1 tbsp

சீரகம் – 1 tbsp

கருவேப்பில்லை தழை  – சிறிது

செய்முறை:-

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, குழம்பு மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி, சமையல் எண்ணெய், கொத்தமல்லி தழை மற்றும் உப்பு சேர்த்து 5-6 விசீல் விட்டு இறக்கவும்.

பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து சமையல் எண்ணெய், வெங்காயம், காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம் மற்றும் கருவேப்பில்லை தழை சேர்த்து தாளித்து, குக்கரில் ஏற்கனவே விசீல் வைத்து இறக்கி வைத்த சாம்பாரில் சேர்த்து பரிமாறவும்.

இந்த சாம்பாரை இட்லீ மற்றும் தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் ருசியா இருக்கும். அதுமட்டுமில்லாமல் குக்கரில் காய்கறிகளை வேக விட்டு சமைத்ததால் அவை அனைத்தும் நன்றாக குழைந்து இருக்கும் இதனால் குழந்தைகள் சாப்பிடும் போது காய்கறிகளை தனியாக எடுத்து வைக்க வாய்ப்பு இல்லை.

Leave a comment