காய் சாம்பார்/VEGETABLE SAMBAR

காய் சாம்பார்/VEGETABLE SAMBAR

தேவையான பொருட்கள்:-

வெங்காயம் – 2 nos(நறுக்கியது)

தக்காளி – 1 nos(நறுக்கியது)

துவரம்பருப்பு – 1 சிறிய கப் (தண்ணீரில் ½ மணிநேரம் ஊறவைக்கவும்)

புளி கரைச்சல் – ½ கப்

காய்ந்த மிளகாய் – 2 nos

பச்சை மிளகாய் – 2 nos

கேரட், வெண்டைக்காய், பீன்ஸ், கத்திரிக்காய், முருங்கைக்காய் அவரைக்காய்  – 1 கப்(நறுக்கியது)

சமையல் எண்ணெய்  – தேவைக்கு ஏற்ப

குழம்பு மிளகாய் பொடி – 2 tbsp

மஞ்சள் பொடி – ½ tbsp

கடுகு – 1 tbsp

சீரகம் – 1 tbsp

கொத்தமல்லி & கருவேப்பில்லை தழை – சிறிது

பெருங்காயப்பொடி – ½ tbsp

உப்பு – தேவைக்கு ஏற்ப

குறிப்பு  – ஒரு குக்கரில் ஊறவைத்த துவரம்பருப்பு, மஞ்சள் பொடி, 1 tbsp உப்பு  மற்றும் 1 tbsp சமையல் எண்ணெய் சேர்த்து 4-5 விசில் விட்டு மசித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்

 செய்முறை:-

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சமையல் எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கருவேப்பில்லை தழை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயப்பொடி சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், வெண்டைக்காய், பீன்ஸ், கத்திரிக்காய், முருங்கைக்காய் அவரைக்காய்  எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக 5-6 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.

பின்பு மஞ்சள் பொடி, குழம்பு மிளகாய் பொடி, தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் ½ கப் புளி கரைச்சலையும் சேர்த்து 20 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

புளி மற்றும் மசாலா வாசனை போன பிறகு மசித்து வாய்த்த பருப்பை அதனுடன் சேர்த்து 2-3 கொதி வரும் வரை விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் காய் சாம்பார் தயாராகிவிடும்.

சைடு டிஷ்

வற்றல்/அப்பளம்

உருளைக்கிழங்கு வறுவல்/வாழைக்காய் வறுவல்

Leave a comment