கோதுமை தோசை/WHEAT DOSAI

கோதுமை மாவு/WHEAT DOSAI

தேவையான பொருட்கள்:-

கோதுமை மாவு – 1 கப்

வெங்காயம் – 1 no (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 nos (பொடியாக நறுக்கியது)

சமையல் எண்ணெய் – 1 tbsp

உப்பு – தேவைக்கு ஏற்ப

சமையல் எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

கடுகு -1 tbsp

கொத்தமல்லி & கருவேப்பில்லை தழை  – சிறிது

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவை சேர்த்து தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி & கருவேப்பில்லை தழை சேர்த்து தாளித்து, ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த கோதுமை மாவு கலவையுடன் கலந்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் தோசை தவாவை வைத்து கலந்து வைத்த மாவை தோசை போல ஊற்றி தேங்காய் சட்னி அல்லது வேர்க்கடலை சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும்.

Leave a comment