கோஸ் கூட்டு சாதம்/CABBAGE KOOTTU RICE

கோஸ் கூட்டு சாதம்/CABBAGE KOOTTU RICE

தேவையான பொருட்கள்:-

கடலைப்பருப்பு – ½ கப்(நல்ல தண்ணீரில் 1 மணிநேரம் ஊறவைக்கவும்)

பச்சைப்பருப்பு – ½ கப்(நல்ல தண்ணீரில் 1 மணிநேரம் ஊறவைக்கவும்)

கோஸ் – 1 கப் (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் – 2(நறுக்கியது)

தக்காளி – 1(நறுக்கியது)

காய்ந்த மிளகாய் – 2 nos

மஞ்சள் பொடி – 1 tbsp

கடுகு – 1 tbsp

சீரகம்– 1 tbsp

உப்பு – தேவைக்கு ஏற்ப

பெருங்காயப்பொடி – 1 tbsp

தண்ணீர் – தேவைக்கு ஏற்ப

சமையல் எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

கருவேப்பிலை தழை – சிறிது

அரைக்க:

தேங்காய் – 5 துண்டு

பொட்டுக்கடலை – ¼ கப்

பச்சை மிளகாய் – 2 nos

சீரகம் – 1 tbsp

இவை அனைத்தையும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

செய்முறை:-

முதலில் ஒரு குக்கரில் ஊறவைத்த கடலைப்பருப்பு, பச்சைப்பருப்பு, பொடியாக நறுக்கிய கோஸ், வெங்காயம், தக்காளி, மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி மற்றும் உப்பு சேர்த்து 6-7 விசில் விட்டு இறக்கி வைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை தழை சேர்த்து தாளித்து வேக வைத்த பருப்புடன் சேர்த்து, பின்பு அரைத்து வைத்த கலவையையும் சேர்த்து 10-15 மிதமான தீயில் சமைத்து இறக்கி அதில் வடித்த 1 கப் சாதத்தை சேர்த்து கிளறினால் சுவையான கோஸ் கூட்டு சாதம் ரெடி.

Leave a comment