தேங்காய் சாதம்/COCONUT RICE

தேங்காய் சாதம்/COCONUT RICE

தேவையான பொருட்கள்:-

தேங்காய் – 1 கப் துருவியது

வடித்த சாதம் – 2 கப்

காய்ந்த  மிளகாய் – 3 nos

உப்பு – தேவைக்கு ஏற்ப

நல்லெண்ணெய் – 2 tbsp

கடலைப்பருப்பு – 1 tbsp

சீரகம் – 1 tbsp

மிளகு- 1 tbsp

கடுகு & உளுந்து – 1 tbsp

கருவேப்பில்லை தழை – சிறிது

செய்முறை:-

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு & உளுந்து, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, சீரகம்,  மிளகு மற்றும் கருவேப்பில்லை தழை சேர்த்து தாளித்து பின்பு துருவிய தேய்காயையும் சேர்த்து வதக்கி, தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் வடித்த சாதத்தை யும் அதனுடன் சேர்த்து கிளறி எடுத்தால் அருமையான தேங்காய் சாதம் தயார்.

சைடு டிஷ்:

  • வாழைக்காய் வறுவல்
  • உருளைக்கிழங்கு வறுவல்
  • கருணைக்கிழங்கு வறுவல்
  • ஊறுகாய்
  • அப்பளம்

Leave a comment