புளி குழம்பு/PULI KUZHAMBU

புளி குழம்பு/PULI KUZHAMBU

தேவையான பொருட்கள்:-

வெங்காயம் – 2 nos(நறுக்கியது)

தக்காளி – 1 nos(நறுக்கியது)

பூண்டு – 5-6 பல்லு

புளி – 2 எலும்பிச்சை அளவு(தண்ணீரில் ½ மணிநேரம் ஊறவைக்கவும்)

காய்ந்த மிளகாய் – 2 nos

பச்சை மிளகாய் – 2 nos

வாழைக்காய், உருளைக்கிழங்கு, கேரட், வெண்டைக்காய் – 1 கப்(நறுக்கியது)

நல்லெண்ணெய் – தேவைக்கு ஏற்ப

குழம்பு மிளகாய் பொடி – 3 tbsp

மஞ்சள் பொடி – ½ tbsp

கடுகு – 1 tbsp

சீரகம் – 1 tbsp

மிளகு – 1 tbsp

கருவேப்பில்லை தழை – சிறிது

பெருங்காயப்பொடி – ½ tbsp

உப்பு – தேவைக்கு ஏற்ப

குறிப்பு  – ஊறவைத்த புளியை கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்

செய்முறை:-

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகு, கருவேப்பில்லை தழை, பூண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயப்பொடி சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, வாழைக்காய், உருளைக்கிழங்கு, கேரட், வெண்டைக்காய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக 5-6 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.

பின்பு மஞ்சள் பொடி, குழம்பு மிளகாய் பொடி, தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் புளி கரைச்சலையும் சேர்த்து 20 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும். எண்ணெய் தனியாக திரண்டு வரும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால் புளி குழம்பு தயாராகிவிடும்.

சைடு டிஷ்

வற்றல்

அப்பளம்

கேரட் பொரியல்

Leave a comment