மஷ்ரூம் குடைமிளகாய் கிரேவி/MUSHROOM CAPSICUM GRAVY

மஷ்ரூம் குடைமிளகாய்  கிரேவி/MUSHROOM CAPSICUM GRAVY

தேவையான பொருட்கள்:-

மஷ்ரூம் – 1 கப்

குடைமிளகாய் – 1 கப் (நறுக்கியது)

பெரிய வெங்காயம் – 6 nos (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 3 nos (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது – 1 tbsp

காய்ந்த மிளகாய் – 2 nos

பச்சை மிளகாய் – 2 nos

கடுகு -1 tbsp

மிளகு -1 tbsp

சீரகம் – 1 tbsp

கரம் மசாலா – 1 tbsp

மிளகாய் பொடி – 1 tbsp

மஞ்சள் பொடி – 1/4 tbsp

சமையல் எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

கருவேப்பில்லை & கொத்தமல்லி – சிறிது

உப்பு – தேவைக்கு ஏற்ப

குறிப்பு  மஷ்ரூமை  நன்றாக கழுவி எடுத்து வைத்திக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதை வாரம் ஒரு முறை அரைத்து பிரிட்ஜ்ல ஸ்டோர் பண்ணி வைத்திக்கொண்டால் தேவையான நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

செய்முறை:-

முதலில் ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து, அதில் சமையல் எண்ணையை ஊற்றி காய்ந்ததும், கடுகு, மிளகு, சீரகம் சேர்த்து தாளித்த பின் காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.அடுத்து நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு தக்காளியையும் வதக்கி கொள்ளவும். அடுத்து கரம் மசாலா, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து கொஞ்சம் தேவைக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி 10-15 நிமிடம் மசாலா-வின் வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

அடுத்து கழுவி வைத்த மஷ்ரூமையும், குடைமிளகாயும் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் வேக விடவும். மஷ்ரூம் மற்றும் குடைமிளகாய் நன்றாக வெந்தப்பிறகு கருவேப்பில்லை & கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சுவையான மஷ்ரூம் குடைமிளகாய்  கிரேவி தயார். இந்த கிரேவியை தோசை, இட்லீ, சப்பாத்தி மற்றும் வடித்த சாதத்திலும் சேர்த்து சாப்பிடலாம்.

Leave a comment