மஷ்ரூம் பிரியாணி/MUSHROOM BIRIYANI

மஷ்ரூம் பிரியாணி /MUSHROOM BIRIYANI

தேவையான பொருட்கள்:-

பாசுமதி அரிசி – 2 கப்

மஷ்ரூம் – 250 gram

பெரிய வெங்காயம் – 2 nos (பொடியாக நறுக்கியது)

பெரிய தக்காளி – 1 nos (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது – 1 tbsp

பச்சை மிளகாய் – 2 nos

பட்டை, லவிங்கம், ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை – தேவைக்கு ஏற்ப

பச்சை பட்டாணி – ¼ கப்

கரம் மசாலா – 1 tbsp

தனி மிளகாய் தூள் – 1 tbsp

மஞ்சள் தூள் – 1/4 tbsp

தயிர் – 2 tbsp

நெய் – 3 tbsp

புதினா & கொத்தமல்லி – 1 கப் (நறுக்கியது)

உப்பு – தேவைக்கு ஏற்ப

குறிப்பு – பாசுமதி அரிசியை நன்றாக கழுவி அரைமணி நேரம் நல்ல தண்ணீரில் ஊறவைக்கவும். மஷ்ரூம்யும் நன்றாக கழுவி எடுத்து வைத்திக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதை வாரம் ஒரு முறை அரைத்து பிரிட்ஜ்ல ஸ்டோர் பண்ணி வைத்திக்கொண்டால் தேவையான நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

செய்முறை:-

முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவிங்கம், ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து பின் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி அடுத்து இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பின்பு தக்காளியையும் வதக்கி கொள்ளவும். அடுத்து மஷ்ரூம் மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.

மஷ்ரூம் சிறிது வேக ஆரம்பித்தவுடன் கரம் மசாலா, தனி மிளகாய் தூள், மஞ்சள் தூள், தயிர், நறுக்கிய புதினா & கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கொஞ்சம் தேவைக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி 10-15 நிமிடம் மிதமான தீயில் வேகவிடுங்கள்(1 கப் பாசுமதி அரிசிக்கு 1 ½ கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்).

மசாலா-வின் பச்சை வாசனை போன பிறகு அடுத்து ஊறவைத்த பாசுமதி அரிசியை குக்கரில் சேர்த்து நன்றாக கிளறி மிதமான தீயில் இரண்டு விசில் விட்டு எறக்கினால் நம்முடைய சுவையான மஷ்ரூம் பிரியாணி தயார்.

இதனுடன் தயிர் பச்சடி, பப்பட் அல்லது ஏதாச்சும் ஒரு கிரேவியை சைடுடிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Leave a comment