மிளகு ரசம்/MILAGU RASAM

மிளகு ரசம்/MILAGU RASAM

தேவையான பொருட்கள்:-

புளி – 1 எலும்பிச்சை அளவு (தண்ணீரில் ½ மணிநேரம் ஊறவைக்கவும்)

காய்ந்த மிளகாய் – 2 nos

சமையல் எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

மஞ்சள் பொடி – ½ tbsp

மிளகு பொடி – 1 tbsp

கடுகு – 1 tbsp

மிளகு – 1 tbsp

வெந்தயம் – 1 tbsp

சீரகம் – 1 tbsp

கொத்தமல்லி & கருவேப்பில்லை தழை – சிறிது

பெருங்காயப்பொடி – ½ tbsp

உப்பு – தேவைக்கு ஏற்ப

அரைக்க:

மிளகு – 1 tbsp

வெந்தயம் – 1 tbsp

துவரம் பருப்பு – 1 tbsp

சீரகம் – 1 tbsp

காய்ந்த மிளகாய் – 3 nos

பூண்டு – 5 nos

தக்காளி – 1 no(நன்றாக பழுத்தது)

குறிப்பு  – மிக்ஸியில் மிளகு, வெந்தயம், துவரம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு,  தக்காளி சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரத்தில் 5 டம்பளர் தண்ணீர் ஊற்றி ஊறவைத்த புளியை கரைத்து, அதனுடன் அரைத்த மசாலா, மஞ்சள் பொடி, மிளகு பொடி மற்றும் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சமையல் எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பில்லை தழை, காய்ந்த மிளகாய், பெருங்காயப்பொடி சேர்த்து தாளித்து பாத்திரத்தில் கலந்து வைத்ததையும் சேர்த்து மிதமான தீயில் ஒரு கொதி வரும் முன் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் கார சாரமான மிளகு ரசம் தயார்.

சைடு டிஷ்

வற்றல்/அப்பளம்

உருளைக்கிழங்கு வறுவல்/வாழைக்காய் வறுவல்

Leave a comment