மோர் குழம்பு/MOOR KUZHAMBU

மோர் குழம்பு/MOOR KUZHAMBU

தேவையான பொருட்கள்:-

தயிர் – ½ லிட்டர்

வெங்காயம் – 1 no (நறுக்கியது)

வெண்டைக்காய் – 1 கப் (நறுக்கியது)

காய்ந்த மிளகாய் – 2 nos

மஞ்சள் பொடி – ½ tbsp

வெந்தயம் – 1 tbsp

கடுகு – 1 tbsp

உப்பு – தேவைக்கு ஏற்ப

பெருங்காயப்பொடி – 1 tbsp

தண்ணீர் – தேவைக்கு ஏற்ப

சமையல் எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

கருவேப்பிலை தழை – சிறிது

அரைக்க:

துவரம் பருப்பு – ¼ கப்(நல்ல தண்ணீரில் 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்)

சீரகம்– 1 tbsp

இஞ்சி – 1 tbsp (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 3 nos

இவை அனைத்தையும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

செய்முறை:-

முதலில் ஒரு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை தழை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம், பெருங்காயப்பொடி, கருவேப்பிலை தழை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதனுடன் ½ லிட்டர் தயிர், தேவைக்கு ஏற்ப உப்பு, மஞ்சள் பொடி மற்றும் அரைத்து வைத்த பேஸ்டையும் சேர்த்து 5-6 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிட்டு எடுத்தால் அருமையான மோர் குழம்பு தயார்.

Leave a comment