Cold & Cough Relief

சூப்

ஏதாச்சும் ஒரு சூப் செய்து அதில் மிளகு பவுடர் சேர்த்து குடித்தால் விரைவில் சளி தொல்லையில் இருந்து விடுபெறலாம்.

இஞ்சி டீ

ஒரு கிளாஸ் தண்ணீரில் இஞ்சி, மிளகு, சீரகம், சேர்த்து அடுப்பில் நன்றாக கொதிக்க வைத்து அத்துடன் தேன் கலந்து பருகி வந்தால் சளி தொல்லை நீங்கும்.

வைட்டமின் சி

வைட்டமின் சி இருக்குற ஏதாச்சும் ஒரு பழமோ காய்கறியோ சாப்பிட்டால் சளி விரைவில் ஓடி போய்டும்.

மருந்து

1 tbsp தேன் + ½ tbsp எலும்பிச்சை சாறு + ½ tbsp. பட்டை பவுடர் இவை மூன்றையும் கலந்து தினமும் இரண்டு தடவை சாப்பிட்டு வந்தால் சளி விரைவில் குணமாகும்.

சூடு தண்ணீர்

அரை மணி நேரத்திற்கு ஒரு முறை சூடு தண்ணீர் அருந்திவர ஜலதோஷம் சீக்கிரம் நீங்கும்.

பால் + மஞ்சள் பொடி

இரவில் தூங்குவதற்கு முன் காய்ச்சிய பசும்பாலுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து குடித்தால் சளி தொல்லை முற்றிலும் குறையும்.

துளசி டீ

அடுப்பில் ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு கொஞ்சம் துளசி இலை, நசுக்கிய இஞ்சி மற்றும் மிளகு சேர்த்து கொதிக்க விட்டு வெள்ளம் சேர்ந்து பருகினால் சளி தொல்லை நீங்கும்.