Increase Hemoglobin Level

ஹீமோகுளோபின் அதிகரிக்க 7 டிப்ஸ்

டிப்ஸ் #1

உலர்ந்த திராட்சை – இரவில் தூங்குறது முன் ஒரு டம்ளர் நல்ல தண்ணீரில் 10 உலர்ந்த திராட்சை போட்டு இரவு முழுவதும் நன்றாக ஊறவிட்டு பின்பு காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரையும் குடித்துவிட்டு ஊறிய திராட்சை பழத்தையும் சாப்பிடுங்கள் இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர ஹீமோகுளோபின் விரைவில் அதிகரிக்கும்.

டிப்ஸ் #2

 மாதுளைப் பழம் – மாதுளைப் பழம் சாறை தினமும் இருவேளை பனைவெல்லம் சேர்த்து பருகிவர ஹீமோகுளோபின் விரைவில் அதிகரிக்கும், ரத்தஓட்டமும் சீராகும்.

டிப்ஸ் #3

சிவப்பரிசி – உணவில் வெள்ளை அரிசிக்கு பதிலாக சிவபரிசியை உட்கொண்டுவந்தால் உடம்புக்கு வலிமை கிடைப்பதோடு ஹீமோகுளோபினும் விரைவில் அதிகரிக்கும்.

டிப்ஸ் #4

 கடல் உணவு – கடல் உணவை வாரத்திற்கு இருமுறை உணவில் சேர்த்து கொண்டால் உடம்புக்கு சத்து கிடைப்பதோடு ஹீமோகுளோபின் அதிகரிக்கவும் உதவும்.

டிப்ஸ் #5

 தர்பூசணி பழம் – தர்பூசணி பழத்தில் அதிக அளவில் நீர் சத்து இருப்பதால் இது உடம்பில் உள்ள வெப்பத்தை நீக்கி போதுமான சத்தையும் கொடுக்கிறது, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கும்.

 டிப்ஸ் #6

 பீட்ரூட் – தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்துவருவதால் உடம்புக்கு வலிமை கிடைப்பதோடு ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவும். இதில் உள்ள இரும்பு சத்து, போலிக் அமிலம் மற்றும் நார்சத்து உடம்புக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

 டிப்ஸ் #7

 பேரீச்சை பழம் –  பேரீச்சை பழத்தை தேனில் ஊறவைத்து தினமும் இரண்டு ஸ்பூன் சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கலை போக்குவதோடு, ஹீமோகுளோபினும் விரைவில் அதிகரிக்கும்.